புளியங்குளத்தில் அதிமுக சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என்று வாழ்ந்து சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்தி, நல்லிணக்கத்தை உருவாக்கிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்தநாள் விழா மற்றும் 63வது குருபூஜையை முன்னிட்டு இன்று ராமநாதபுரம் பசும்பொன் உட்பட தமிழகத்தின் ஏராளமான பகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் என பலதரப்பட்ட மக்களால் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அதிமுக மேற்கு ஒன்றியம் சார்பாக புளியங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழு திருவுருவ சிலைக்கு விளாத்திகுளம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மற்றும் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவகாமசுந்தரி மகேஷ் ஆகியோர் மாலையை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகி போஸ் மற்றும் கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.