விளாத்திகுளம் கரூர் வைஸ்யா வங்கியின் 3-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்! 



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செயல்பட்டு வரும் கரூர் வைஸ்யா வங்கி கிளையின் 3-ம் ஆண்டு துவக்க விழாவானது, மண்டல முதன்மை மேலாளர் செந்தில்குமரன் அறிவுறுத்தலின்படி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இன்று விளாத்திகுளம் கரூர் வைஸ்யா வங்கி கிளையில் கவின் போஸ் மருத்துவமனையுடன் இணைந்து வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும் வங்கி நிலை மண்டல அலுவலர் ராகுல் பிள்ளை முன்னிலையிலும், விளாத்திகுளம் கிளை மேலாளர் நவீன் ஆபிரகாம் தலைமையில் நடைபெற்ற இந்த இலவச மருத்துவ முகாமில் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டு இரத்த அழுத்தம் பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, உடல் பருமன் உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக செய்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் பெற்று பயனடைந்தனர். விளாத்திகுளத்தில் கரூர் வைஸ்யா வங்கிக் கிளையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த இலவச மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை விளாத்திகுளம் கிளை மேலாளர் தலைமையில் வங்கி பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.