விளாத்திகுளம் அருகே  பூதலப்புரம் கிராமத்தில் ரூ. 16.45-லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே  பூதலப்புரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 16.45-லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்கும், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.45.15-லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம், பள்ளி தலைமை ஆசிரியர் சாய்ராம்,புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.