விளாத்திகுளம் அருகே வாகன விபத்தில் காவலரின் மனைவி உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜேசுபாக்கியம் (34), இவர் எப்போதும் வென்றான் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார், இந்நிலையில் 25-05-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியசாமிபுரம் கிராமத்திலிருந்து இவரது மனைவி லூர்து ஜெனிட்டா (30), மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தனது இருசக்கர வாகனத்தில் தனது மனைவி ஊரான தருவைகுளத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, குளத்தூர் - சுப்பிரமணியபுரம் விளக்கு அருகே திருச்செந்தூர் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக விலகிய போது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், லூர்துஜெனிட்டா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.