விளாத்திகுளத்தில் 7-வது நாளாக நடைபெற்று வரும் ஜமாபந்தியில் உடனடியாக இ-பட்டா & பட்டா மாறுதல்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த மே 14-ஆம் தேதி முதல் 2025-ம் ஆண்டிற்கான வருவாய் தீர்வாய முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விளாத்திகுளம் வட்டத்தைச் சேர்ந்த மக்கள் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, உழவர் அட்டை உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் 7-வது நாளான இன்று சிவஞானபுரம் உள் வட்டத்திற்கு உட்பட்ட கே.குமரெட்டையாபுரம், ஏ.சுப்பிரமணியபுரம், வீரபாண்டிபுரம், மார்த்தாண்டம்பட்டி, அயன்செங்கல்படை, கூத்தலூரணி, வெள்ளையம்மாள்புரம் அதேபோன்று, விளாத்திகுளம் வட்டத்திற்கு உட்பட்ட குருவார்பட்டி,  கீழ விளாத்திகுளம் பகுதி-I, கீழ விளாத்திகுளம் பகுதி-II உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட வருவாய் அலுவலர்(நிலம் எடுப்பு பிரிவு) சங்கரலிங்கத்திடம் மனுக்களாக அளித்தனர். இன்று நடைபெற்ற இந்த வருவாய் தீர்வாய முகாமில் 30 மனுக்கள் பெறப்பட்டது. இவையனைத்தும் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உடனடியாக மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 06 பயனாளிகளுக்கு இ-பட்டாக்களையும், நமச்சிவாயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 03 மனதாரர்களுக்கு பட்டா மாறுதல் உத்தரவினையும் விளாத்திகுளம் வட்ட வருவாய் தீர்வாய அலுவலர் சங்கரலிங்கம் வழங்கினார். இந்நிகழ்வில் சிப்காட் தாசில்தார் சந்திரன், விளாத்திகுளம் தாசில்தார் இராமகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா, மண்டல துணை வட்டாட்சியர்கள் பொன்னம்மாள், சுடலைமாடன், துணை வட்டாட்சியர் (தேர்தல்) பாலமுருகன், வட்ட வழங்கல் அலுவலர் செல்வலட்சுமி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.