அதிமுக ஆட்சி வந்தால் பெண் குழைந்தை வய்ப்பு நிதி மீண்டும் வரவுவைக்கப்படும் : இறுதி கட்டப்பிரச்சாரத்தில் விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் சத்யா !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத்தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யா முதலிபட்டி, தலைக்காட்டுபுரம், புதுப்பட்டி, சின்னையாபுரம், பேரிலேவன்பட்டி, கல்குமி,சிங்கிலிபட்டி, அம்மன்கோவில்பட்டி, வேலிடுப்பட்டி,சித்தவநாயக்கன்பட்டி,மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து கிராமம் கிராமமாக வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய வேட்பாளர் சத்யா அதிமுக ஆட்சி வந்த உடன் பெண் குழந்தை வைப்பு நிதி மீண்டும் வர வைக்கப்படும், பெண்களுக்கு மானிய அளவில் இருசக்கர வாகனம் வழங்கப்படும்,பயிர் கடன் முறையாக ஆய்வு செய்து விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும், பம்பை-அச்சங்கோயில்-வைப்பார் நதிஇணைப்பு செயல்படுத்தப்படும், காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனக்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வேட்பாளர் சத்யா அறிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஒன்றிய செயலாளர் மகேஷ்,தனவதி, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் ராஜகோபால், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்த் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.