மக்களுக்கான விவசாயிகளுக்கான ஆட்சி என்றால் அது அதிமுக ஆட்சி தான் : அதிமுக வேட்பாளர் சத்யா தீவிர பிரச்சாரம்!



தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சத்யா படர்ந்தபுளி, தலைக்காட்டுபுரம், புதுப்பட்டி, கழுகாசலாபுரம், பிள்ளையார்நத்தம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு கிராமம் கிராமமாக வீதி வீதியாக சென்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது  வேட்பாளர் சத்யா பேசுகையில் கடந்த 5 ஆண்டுகளாக  விவசாயிகளுக்கு முறையான இன்சூரன்ஸ் மற்றும் காப்பீட்டுத் தொகை  ஏறாமல் விவசாயிகள் பெறும் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல் பால், மின்சாரம்,சொத்துவரி உள்ளிட்ட விலைவாசி உயர்வினால் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்குமான ஆட்சி என்றால் அது அதிமுக ஆட்சி தான் எடப்பாடி ஆட்சி அமைந்திட அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு தங்களின் வாக்குகளை தருமாறு வேட்பாளர் சத்யா வாக்கு சேகரித்தார் .

இந்நிகழ்வில் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன்,அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தெற்கு ஒன்றிய தலைவர் சிவகாமசுந்தரி,அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்த், கார்த்திக்ராம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.