நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் - விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட  12 ம் வகுப்பு பள்ளி மாணவி தந்தை பேட்டி! 



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  வேடநத்தம் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவியின் தந்தை  சுப்புராஜ், செய்தியாளர்களிடம் பேசுகையில்... என்னுடைய குழந்தை மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்தால் உடனடியாக உடலை வாங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.



குற்றவாளிகளை காட்டுங்கள் அரசிடம் நாங்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறோம்,உடற் கூறாய்வு அறிக்கை காவல் நிலையத்திற்கு வந்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இதுவரை தங்களுக்கு தரவில்லை.. அந்த அறிக்கையை நாங்கள் இதுவரை வாங்கவில்லை. சீக்கிரம் வாங்கி விடுவோம். 



 சம்பவம் நடைபெற்ற முதல் நேற்று முன்தினம் வரை இரவு பகல் என  காவல்துறையினர் எங்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் கேட்ட அனைத்திற்கும் பதில் தெரிவித்துள்ளோம். நாங்கள் காவல்துறைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்துள்ளோம்.


உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை கொடுத்தால் போதும் ,எல்லா அரசியல் கட்சியினர். அனைத்து தரப்பினர்  வந்து ஆறுதல் கூறினார்.  எங்களுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்து சென்றுள்ளனர். குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தெரிவித்துள்ளோம், யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என்று காவல்துறை கேட்கவும் இல்லை நாங்கள் சொல்லவும் இல்லை.எங்களுக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை. எங்களுக்கு கிராமத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதால் யார் மீதும் சந்தேகப்பட முடியாது.



எங்கள் குழந்தை மரணத்திற்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.