புதூர் பேரூராட்சி மக்களுக்கு பல எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளேன் : திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிரப் பிரச்சாரம்!
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் விளாத்திகளும் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரான மார்க்கண்டேயன் புதூர் வீரகாளியம்மன் கோவில், காவல் நிலையம், சௌடாம்பிகா கோவில், கீரைத்துரை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய மார்கண்டயேன் புதூர் பேரூராட்சி பகுதியில் சுமார் 6000 வாக்காளர்கள் உள்ளனர், புதூர் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற மக்களை தேடி மருத்துவத்தில் 2500 பொதுமக்கள் பயன்பெற்றுள்ளனர், அதேபோல் புதூர் பேரூராட்சி பகுதிகளுக்கு அங்கன்வாடி நியாய விலை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு எண்ணற்ற நலத்திட்டங்களை நான் கொண்டு வந்துள்ளேன் என்று கூறி வேட்பாளர் மார்கண்டயேயன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, ராதாகிருஷ்ணன்,செல்வராஜ்,மும்மூர்த்தி, புதூர் பேரூர் கழக செயலாளர் மருதுபாண்டி, வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.