தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் உட்பட பல இடங்களில் தற்போது போலி செய்தியாளர்களின் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. அவர்கள் தங்களது இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் "PRESS" ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டும், போலி செய்தியாளர் அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டும் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினரிடம் பணம் பரிப்பது மட்டுமின்றி பொதுமக்களிடமும் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை செய்தி வெளியிட்டு சரிசெய்துவிடலாம் என பொதுமக்களிடமும் வசூல் வேட்டை நடந்து வருகின்றனர். இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இந்த போலி செய்தியாளர்களை காவல்துறை அதிகாரிகளே உண்மையான செய்தியாளர்கள் என நம்பி அவ்வப்போது செலவிற்கு பணம் கொடுப்பதுதான்.... என்று சொல்லப்படுகிறது. காவல்துறைக்கே விபூதி அடித்து வசூல் செய்து வரும் போலிச் செய்தியாளர்களை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, மாவட்ட செய்தி தொடர்பு அலுவலகத்தின் அங்கீகாரம் பெற்று இரவு - பகல் பாராது மக்கள் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வரும் உண்மையான பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினரின் மாண்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் இத்தகைய போலிச்செய்தியாளர்களை உடனடியாக களையெடுக்க வேண்டும் எனவும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vilathikulam
போலி செய்தியாளர்கள் வசூல் வேட்டை - மக்களே உஷார்...!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பல்வேறு அரசு திட்ட பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ மார்க்கண்டேயன்.
அடுத்த
சுப முகூர்த்த தினம் என்பதால் பூக்களின் விலை இரு மடங்கு உயர்வு!
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026