தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் மயில்ராஜ்(58), மயில்ராஜ் அரசு ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13- 01-2024 சனிக்கிழமை விளாத்திகுளத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் நெடுங்குளம் செல்லும் பொழுது கீழ விளாத்திகுளம் விளக்கு அருகே சாலையோரம் நின்ற இரு சக்கர வாகனம் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானதில், மயில்ராஜ் பலத்த காயம் அடைந்தார். இதனை அடுத்து முதலுதவி சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுமதித்த பின், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்,17-01-3024 புதன்கிழமை சிகிச்சை பலனின்றி மயில்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
வாகன விபத்தில் அரசு ஒப்பந்ததாரர் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இளம்புவனம் கிராமத்தில் எம்ஜிஆரின் 107 வது பிறந்தநாள் விழா!
அடுத்த
உயிரிழந்த (7) வயது சிறுவன் அஸ்வின்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ மார்கண்டேயன்.
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026