விளாத்திகுளம் அருகே  அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு : போலீசார் விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி என்பவரின் மகள் மாலதி(11), இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார், மாலதி அடிக்கடி அரிசி சாப்பிடுவதாக கூறப்படுகிறது, இதனால் அரிசி சாப்பிட்ட மாலதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இது குறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.