விளாத்திகுளம் அருகே எட்டையபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு!
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான செல்வி.ஜெ. ஜெயலலிதா அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் எட்டயபுரத்தில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ, ஆலோசனையின் பேரில்,விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில், எட்டையாபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு ஜெயலலிதா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
இந்தநிகழ்வில் அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள், கார்டன் பிரபு, சின்னத்துரை, கருப்பசாமி,சிவா ஜெயக்குமார்,சீனா என்ற முத்துகிருஷ்ணன், சொக்கன், சிவசங்கர பாண்டியன்,மூர்த்தி, செல்வி,சாந்தி, ரத்தினம்,மாவட்ட கழக நிர்வாகிகள் வேலுச்சாமி, மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.