விளாத்திகுளத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!



மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவியும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளத்தில், வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினார். இதையொட்டி விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், பால்ராஜ், மாரிமுத்து,தகவல் தொழில்நுட்ப பிரிவு புதூர் ஒன்றிய செயலாளர் மோகன், தனபதி,போடுசாமி, சண்முகவேல்,ரவி நாயுடு,வரதராஜ பெருமாள்,  மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பிரியா, சாந்திஉட்பட ஏராளமான கட்சியினர் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.