புதிய டிஜிட்டல் வடிவிலான அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூரில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து புதூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் மற்றும் பேரூராட்சி அதிமுக நிர்வாகிகளுக்கு டிஜிட்டல் வடிவிலான புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழாவில் அதிமுக அமைப்பு செயலாளர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு உறுப்பினர் அட்டையை கட்சி நிர்வாகிகளிடம் வழங்கி சிறப்புரையாற்றினார்.


இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கிளை வாரியாக சென்று தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கி தீவிரமாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வரவிருக்கும் உள்ளாட்சி மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.



இந்நிகழ்வில் அதிமுக மாநில இலக்கிய அணி இணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  சின்னப்பன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் வெம்பூரார், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கவியரசன், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் போடுசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் KM சுரேஷ்குமார்,ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மோகன், சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் விஜயகுமார், முத்துமாரியம்மன், தழிழ்முருகன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசந்திரன்,  உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மேற்கு ஒன்றிய செயலாளர் தனவதி கிழக்கு ஒன்றிய செயலாளர் தனஞ்செயன், பேரூராட்சி செயலாளர் ஆண்டி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்...