விளாத்திகுளம் அருகே வேப்பலோடையில் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 109-வது பிறந்தநாள் விழா!
தமிழக முன்னாள் முதல்வர் பாரதரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் MGR ரின் 109வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் தரப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடையில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி ஏற்பாட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மோகன், ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகத்துடன்கொண்டாடினர்.
இந்நிகழ்வில், விளாத்திகுளம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவகாமசுந்தரி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாவிற்கு வந்திருந்த அதிமுகவினருக்கு வேப்பலோடை கிராம மக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.