விளாத்திகுளத்தில் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் கொண்டாட்டம்!
தமிழக முன்னாள் முதல்வர் பாரத ரத்னா புரட்சி தமிழர் டாக்டர் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அதிமுக முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் தலைமையில், விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்,பின்னர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அதனைத் தொடர்ந்து பேரணியாக வந்து காய்கறி மார்க்கெட் அருகிலுள்ள எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்,கே பெருமாள்,ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், பால்ராஜ், நகர செயலாளர் மாரிமுத்து,அதிமுக நிர்வாகிகள் வரதராஜ பெருமாள்,ஆனந்த்,ரவி நாயுடு,தங்கராஜ், சண்முகசாமி மற்றும் மகளிர் அணி சாந்தி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.