எட்டயபுரம் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட பட்டாசு ஆலைகளை மூட வேண்டும் - புதியதாக பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்க கூடாது என்பதனை வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏங்கி வரும் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்து காரணமாக கடும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறதுஇதனால் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் தொடங்குவதற்கும் இயங்குவதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு முறையாக அனுமதி பெறாமல் இயங்கக்கூடிய ஆலைகள் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் தொடங்க ஆலை உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்ட எல்லையொட்டி அமைந்துள்ள எட்டயபுரம், முத்தலாபுரம் பகுதியில் பட்டாசு ஆலை அமைக்க உரிமம் பெற்று ஆலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்...இந் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்பூரில் உள்ள ஜாஸ்மின் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு உரிமையாளர் உறவினர் கந்தசாமி பலியானார்.
வெடி விபத்தால் அச்சமடைந்த அப்பகுதி கிராம மக்கள் விவசாயிகள் தங்கள் பகுதியில் செயல்படும் பட்டாசு ஆலைகளை மூட வேண்டும் , அனுமதி வழங்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கோட்டூர் விளக்கில் கரிசல் பூமி விவசாயிகள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிதாக தொடங்கப்பட்ட பட்டாசு ஆலைகளை மூட வேண்டும், பட்டாசு ஆலைக்கு அனுமதி வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.