தூத்துக்குடியில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது!
தூத்துக்குடி பகுதியை சேர்ந்த ராஜு (39), இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜு தனது 11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமியின் தாயார் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,போலீசார் ராஜீவை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தனது பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் தூத்துக்குடி முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.