விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம்,புதூர், எட்டையாபுரம், கயத்தார் உள்ளிட்ட பகுதி விவசாயிகளுக்கு கடந்த 2023-2024 ,ம் ஆண்டுக்கான நிவாரணத் தொகை வழங்காததை கண்டித்து விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர், இதனைத்தொடர்ந்து வட்டாட்சிய ராமகிருஷ்ணன் பேச்சு வார்த்தை நடத்தினார்.பேச்சுவார்த்தையில் டிசம்பர் 27 ம் தேதிக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும் என உறுதி அளித்து தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.