விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் சிவஞானபுரம் மற்றும் நமச்சிவாயபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் சிவஞானபுரம் மற்றும் நமச்சிவாயபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த சமத்துவ பொங்கல் விழாவில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோல போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் உதவி செயற்பொறியாளர் மாடசாமி சுந்தர்ராஜன், ஊராட்சி செயலர் பால்ராஜ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சை மற்றும் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் என கலர் கலந்து கொண்டனர்.