அதிவேகத்தில் சென்ற மணல் லாரிகள்: லாரிகளை சோதனை செய்து எச்சரித்து அனுப்பிய போலீசார்!
விளாத்திகுளம் அருகே நீர்வரத்து ஓடையை ஆக்கிரமிப்பு செய்து மணல் குவிப்பு:நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறை...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் - பரளச்சி சாலையில் உள்ள தனியார் விற்பனை மனை இடத்திற்கு, மெட்டில்பட்டி கிராமத்திலிருந்து ஏராளமான லாரிகள் சரல்மண் ஏற்றி விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகத்தில் வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட எல்லையான சென்னம்மரெட்டிபட்டி சோதனை சாவடியில் போலீசார் அதிவேகமாக வந்த சரளமன் லாரிகளை தடுத்து நிறுத்தி, முறையான அனுமதி இருக்கிறதா என சோதனை செய்து, புதூர் நகர் பகுதியில் செல்லும் பொழுது மெதுவாக செல்ல வேண்டும் என்று எச்சரித்து அனுப்பினர்.
அதேபோல் புதூர் பரளச்சி சாலையில் தனியார் வீட்டு மனையாளர் ஒருவர்,சாலையின் ஓரம் கல்தூண் ஊன்றி, சரல்மண்களை கொட்டி நீர்வரத்து ஓடைகளை ஆக்கிரமிப்பு செய்து வருவதாக அப்பகுதி மக்கள் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.