200 இடங்களை வெல்வோம் என்று திமுக மாயை உருவாக்க முயற்சி செய்கிறது.  இதற்கு மக்கள் மயங்க மாட்டார்கள்.நிதிகள் (உதயநிதி இன்பநிதி)வருவதால் மக்களுக்கு துன்ப நிதி தான் வருகிறது -விளாத்திகுளம் அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் , பேரூர் கழக செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு பேசுகையில் ,உதயநிதிக்கு அப்புறம் இன்பநிதி. இந்த நிதி வருவதால் மக்களுக்கு துன்ப நிதிதான் வந்து சேரும் .ஜல்லிக்கட்டு போட்டியின் போது இன்பநிதி வந்ததும் மாவட்ட ஆட்சியர் எழுந்திருக்க வேண்டிய நிலை. திமுகவில் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். இது ஆச்சரியமான விஷயம் இல்லை ,திமுக போன்று தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து அதிமுக மக்களை ஏமாற்ற வில்லை ,தேர்தல் வாக்குகளை கொடுத்து மக்களுக்கு திமுக நாமம் போட்டு உள்ளது 

2026ல்தான் திமுகவிற்கு  மக்களின் முடிவு தெரியும்.ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் மறுமுறை திமுக ஆட்சிக்கு வராது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றி விட்டார், 

200 இடங்களை வெல்வோம் என்று திமுக மாயை உருவாக்க முயற்சி செய்கிறது.  இதற்கு மக்கள் மயங்க மாட்டார்கள். திமுக ஆட்சியின் மயக்கத்தில் இருந்து மக்கள் தெரிந்து விட்டார்கள் .திமுக ஆட்சி விடியல் ஆட்சி இல்லை விடியா ஆட்சி , இந்த ஆட்சி ஒழிந்தால்தான் நமக்கு விடிவு கிடைக்கும் என்று மக்கள் நினைத்துவிட்டனர் .2011ல் ஏற்பட்ட அரசியல் திருப்பு முனை 2026ல் தமிழகத்தில் நிச்சயமாக வரும் 200 இடங்களை தாண்டி அதிமுக வெற்றி பெறும் .சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் கெட்டுப் போய் உள்ளது. இளைஞர்கள் அதிமுகவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர் .அனைத்து தரப்பு மக்களும் திமுக ஆட்சியில் ஏமாற்றம் அடைந்துள்ளனர் .நீட் தேர்வு ஒழிப்போம் என்று மாணவர்களை திமுகவினர் ஏமாற்றி விட்டனர் .கல்விக்கடன் ரத்து என்று கூறி மாணவர்களின் பெற்றோரை ஏமாற்றி விட்டனர் .5 பவுன் தங்க நகை கடன் வைத்தல் தள்ளுபடி என்று கூறினர். அவர்களை நம்பி தாய்மார்கள் ஏமாந்து தான் மிச்சம்.அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த‌ தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டனர் .தாலிக்கு தங்கம் கொடுத்தது அதிமுக அதை அறுத்து எடுத்தது திமுக ,பெண்கள் இன்றைக்கு மஞ்சள் கயிற்றை தான் அணிந்திருக்கக் கூடிய நிலை உள்ளது 

அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று வாக்களித்தனர். ஆனால் அதிமுக குரல் கொடுத்த பின்னர் தான் மூன்று ஆண்டுகள் கழித்து தான் அந்தத் திட்டத்தை தொடங்கினர். தமிழகத்தில் உள்ள தாய்மார்களே தகுதி உள்ளவர்கள் தகுதி இல்லாதவர்கள் என்று திமுக அரசு பிரித்துள்ளது.அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் அனைத்து குடும்ப தலைவிக்கும் ரூபாய் 1500 ரூபாய் மாதம் தோறும் வழங்கி இருப்போம்.பழைய ஓய்வு திட்டத்தை கொண்டு வருவோம் என்று வாக்குறுதி கொடுத்து அரசு ஊழியர்களையும் திமுக ஏமாற்றிவிட்டது திமுக அரசை எதிர்த்து அனைத்து துறை அரசு ஊழியர்களும் போராடி வருகின்றனர்.கடந்த தேர்தலில் நாங்கள் தவறு செய்து விட்டோம் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக இருக்கும் என்று அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் 



அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார் என்று நாங்கள் கேள்வி கேட்கிறோம். இதுவரை திமுக அரசு கண்டுபிடிக்கவில்லை ஏனெனில் அந்த சார் அவர்களுக்குள் தான் இருக்கிறார்.சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட தமிழக அரசு தயங்குகிறது போதைப்பொருள் காரணமாகத்தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் உள்ளது. இந்த போதை பொருள் கடத்தலுக்கு திமுக தான் காரணம் .கோவில்பட்டி பகுதியில் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கக்கூடிய யூரியா உர மூட்டைகள் பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளனர் இதில் திமுக நிர்வாகியும் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்



அதிமுக ஆட்சியில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறாமல் இருந்தது. அதை சுட்டிக்காட்டியதும் தற்போது திமுக அந்தப் பணியை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. தொழிலாளர் நலத் துறை செய்ய வேண்டியதை திமுகவினர் எப்படி செய்ய முடியும் 



காட்டுப்பன்றி மற்றும் மான்கள் தொல்லையினால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாய பணிகள் தொடங்குவதற்கு முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.சரியான நேரத்தில் நடவடிக்கைகள் கொடுக்கவில்லை என்பதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.காட்டுப் பன்றிகளை சுடலாம் என்று அமைச்சர் பொன்முடி சட்ட சட்டமன்றத்தில் கூறுகிறார். யார் சுட வேண்டும் என்பதை தெளிவாக கூறவில்லை.திமுக ஆட்சியில் அனைத்திலும் மக்கள் ஏமாந்து விட்டனர். இனி மக்கள் ஏமாற தயாராக இல்லை என்றார். 


நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஓட்டப்பிடாரம்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ்,தனபதி, தனஞ்ஜெயன், மகேஷ், பால்ராஜ்,கோவில்பட்டி மாமன்ற உறுப்பினரும்அதிமுக இளம்பெண் பாசறை கவியரசன், எட்டையாபுரம் மகளிர் அணி சாந்தி,செல்வி, விளாத்திகுளம் மகளிர் அணி பிரியா,சாந்தி விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு சுரேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.