விளாத்திகுளம் திமுக சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள் விழா: மார்கண்டேயன் MLA மலர் தூவி மரியாதை !
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள அன்னாரின் உருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்..மேலும் திமுக நிர்வாகிகள் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்று கொண்டார்கள்.