விளாத்திகுளம் அருகே கடன் பிரச்சினை காரணமாக ஆட்டு வியாபாரி தூக்கிட்டு தற்கொலை?



விருதுநகர் மாவட்டம் சாத்தூர் - முத்துச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த சர்க்கரை கோனார் என்பவரின் மகன் மாரியப்பன் (40), இவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பட்டித்தேவன்பட்டி பகுதியில் ஆடுகளை கிடை அமர்த்தி வந்துள்ளார், மாரியப்பனுக்கு அதிக கடன் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது, இந்தநிலையில் 03-03-2025  மாலை  பட்டித்தேவன்பட்டி காட்டுப்பகுதியில் உள்ள புளியமரத்தில் மாரியப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்,தகவல் அறிந்த மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் மாரியப்பன் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.