விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதியில் முதியவர் சடலம்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த சன்னாசி என்பவரின் மகன் கருப்பையா (70), இவர் சுப்பிரமணியபுரம்  EB ஆபீஸ் அருகே காட்டப் பகுதியில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் கருப்பையா உடலை மீட்டு பிரேதாய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருப்பையா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும்  வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.