தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலத்தில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்து செல்வர். அதிலும் பிரதோஷம் போன்ற முக்கிய தினங்களில் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற "மஹா சனிப்பிரதோஷத்தை" முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், திருநீறு, மஞ்சள் உள்ளிட்ட பலவகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தாமரைப்பூ, அருகம்புல், எருக்கம் பூ, மஞ்சள், வில்வ இலை, உள்ளிட்ட பல வகையான மாலைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டப்பின் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Vilathikulam
மஹா சனிப்பிரதோஷ வழிபாடு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திமுக நிர்வாகிகளுடன் MLA மார்கண்டயேன் ஆலோசனை.
அடுத்த
வாக்குச்சாவடி பணியாளர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு!
இதையும் படிக்கலாம்
கடும் வெயிலில் மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம்!
18 Oct 2026
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026