அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகளை திருட்டுத்தனமாக கள்ளச்சந்தையில் விற்கும் ஒப்பந்ததாரர்கள்!



செய்தி எடுக்க சென்ற செய்தியாளரை இது உங்களுக்கு தேவையில்லாத வேலை, நீங்க எந்த ஊர்?  உங்கள ஊருல வந்து பார்த்துக்கிறேன் என்று மிரட்டல்...


நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரசாத்,இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி, தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு முட்டை வழங்கும் ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருகிறார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள்,1000-க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகள்,300- க்கும் மேற்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது, அவ்வாறு செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு வாரத்திற்கு மூன்று முறை சத்துணவு முட்டை வழங்கப்படுவது வழக்கம். 


இந்நிலையில் ஒப்பந்ததாரர் பிரசாத்தால் நாமக்கல்லில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் பள்ளிகளுக்கு உரிய நேரத்தில் முட்டை வழங்க முடியாது என்பதால்,துணை ஒப்பந்ததாரர் மூலம் பள்ளி மற்றும் அங்கன்வாடிகளுக்கு முட்டை வழங்கும் ஒப்பந்தத்தினை வழங்கி வந்தார்.



அவ்வாறு முட்டை வழங்கும் துணை ஒப்பந்ததாரர்கள் அங்கன்வாடி மற்றும் பள்ளிகளுக்கு வழங்கக்கூடிய முட்டைகளிலிருந்து, ஒவ்வொரு முறையும் துணை ஒப்பந்ததாரர் நாகராஜ் (47) மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டன் (25) ஆகியோர்


இருவரும் சேர்ந்து ஒவ்வொரு முறையும் 3 முதல் 5 வரை முட்டை வரை பள்ளிக்கு வழங்காமல் கையாடல் செய்து,அந்த முட்டைகளை ரூபாய் 5-க்கு ஹோட்டல்,பேக்கரி, கிராம பொதுமக்களிடம் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில்,இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரப்பநாயக்கன்படடி கிராமத்தில் முட்டைகளை வாகனத்தில் வைத்தவாரு ரூபாய் 5-க்கு விற்பனை செய்து கொண்டிருந்தனர், இதனை அடுத்து முட்டையை விற்பனை செய்வதை செய்தியாளர் படம் பிடிக்க முயன்ற போது, வாகனத்தை அங்கிருந்து மின்னல் வேகத்தில் இயக்கி சென்றனர்.


இதனை தொடர்ந்து அவ்வழியாக வந்த அதே செய்தியாளரின் வாகனத்தை மறித்து இது உங்களுக்கு தேவையில்லாத வேலை, உங்களுக்கு எந்த ஊர்? உங்களை அங்கு வந்து பார்த்துக்கொள்கிறேம் என்றும் மிரட்டல் விடுத்தனர், இதனை அடுத்து செய்தியாளர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததும், போலீசார் வருவதை அறிந்த அந்த துணை ஒப்பந்ததாரர்கள் அங்கிருந்து வாகனத்தை மின்னல் வேகத்தில் எடுத்து தப்பிச்சென்றனர்.


இதுகுறித்து நாமக்கல் முட்டை ஒப்பந்ததாரர் பிரசாதிடம் கேட்டபோது, இந்த புகார் எங்களுக்கு தற்போது தான் வந்துள்ளது, நாகராஜ் மற்றும் மணிகண்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் முட்டை வழங்கும் துணை ஒப்பந்தத்தை வேறு நபர்களுக்கு மாற்றப்படும் என்று கூறியுள்ளார்.



அதேபோல் அங்கன்வாடிக்கு  வழங்கப்படும் மாவுகளை அங்கன்வாடி ஊழியர்கள் ஒரு சிலர் ஒரு மூடையை 500 முதல் 1500 ரூபாய் வரை விற்பதாகவும், சமையலுக்கு வழங்கப்படும் பருப்புகளை ஹோட்டலுக்கு விற்பதாகவும் வந்த புகாரின் குறித்து குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பத்மாவிடம் கேட்டபோது,அப்படி எந்த புகார் வரவில்லை அப்படி சட்ட விரோதமாக மாவு,முட்டை, பருப்புகளை விட்டால் அவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.