விளாத்திகுளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து : 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு!
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்த TN69BA2683 என்ற வாகனப் பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரியை சுந்தர பாண்டியன் என்ற ஓட்டுநர் ஓட்டி வந்ததுள்ளார். இந்த லாரி விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த லாரியை ஓட்டிவந்த டிரைவர் சுந்தரபாண்டியன் தூக்க கலக்கத்தில் ஓட்டியதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் சுந்தர் பாண்டியன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து காரணமாக தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து சாலையோரத்தில் கவிழ்ந்து கிடந்த கன்டெய்னர் லாரியை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.