சீராக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி எட்டையாபுரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 6 மற்றும் 10வது வார்டுகளில் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்றும், 15 நாளைக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய சூழ்நிலையில் மக்கள் இருப்பதாகவும், எனவே சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், 6வது வார்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் முதியோர்கள் பெரிதும் அவதிப்படுவதால் அந்த பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி எட்டையாபுரம் பேரூராட்சி அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டனர்.
அ.தி.மு.க நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனுவை பேரூராட்சி அலுவலகத்தில் வழங்கினர்.