விளாத்திகுளம் அருகே கட்டிடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த முத்துகந்தசாமி என்பவரின் மகன் மணிகண்டன் (34) இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார், இவருக்கு மதுபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் வீட்டில் மது போதையில் குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக மணிகண்டன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் மணிகண்டன் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணிகண்டனுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.