விளாத்திகுளம் அருகே தரமற்ற ரேஷன் அரிசி வழங்கியதை கண்டித்து:நியாய விலைக் கடை முன்பு பொதுமக்கள் அரிசியை தரையில் கொட்டி போராட்டம். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக நியாய விலை கடையில் தரமற்ற முறையில் ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வருவதாகவும்,
இதுகுறித்து பலமுறை அக்கிராம மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தற்போது இரண்டு நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்ட அரிசி மிகவும் பெரிதாகவும்,தரமற்ற முறையில் இருப்பதாகவும் கூறி கிராம மக்கள் நியாய விலைக் கடை முன்பு தரையில் அரிசியை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் முறையாக மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை என கிராம மக்கள் கூறுகின்றனர். அதேபோல் நியாயவிலைக் கடையில் பணியாற்றும் பணியாளர் கன்னியம்மாளின் கணவர் தம்பிராஜன் என்பவர் நியாய விலை கடைக்கு வரும் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் பேசியும், கடுமையாகப் பேசுவதும் தொடர் கதையாக உள்ளது என்று அக்கிரம மக்கள் கூறுகின்றனர். எனவே அரசு தரமான அரிசியை வழங்க வேண்டும் மற்றும் நியாய விலைக் கடையில் பணிபுரியும் கண்ணியம்மாள் மற்றும் அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கிரம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Vilathikulam
தரமற்ற ரேஷன் அரிசி வழங்கியதை கண்டித்து அரிசியை தரையில் கொட்டி மக்கள் போராட்டம் .
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பனிமய மாதா பேராலய தங்க தேர் திருவிழா-மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு திருப்பலி !
அடுத்த
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
இதையும் படிக்கலாம்
அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க விழா: விளாத்திகுளத்தில் உற்சாகத்துடன் கொண்டாடிய அதிமுகவினர்!
17 Oct 2026
நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…
16 Oct 2026
ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
15 Oct 2026
துாத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் அருகே 17வது முறையாக சேதமடைந்த பாலம் - நிரந்தர தீர்வு காண வாகன ஓட்டிகள் கோரிக்கை.
13 Oct 2026