எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில்  ஜமாபந்தி நிறைவு! 


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் எட்டயபுரம் வட்டத்தில் 1434 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாக கணக்கு முடிப்பு வருவாய் தீர்வாய் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் கடந்த 14ந்தேதி ஜமாபந்தி தொடங்கிய நிலையில் ஈராச்சி,எட்டயபுரம்,மேலஈரால்,வாலம்பட்டி,நக்கலகட்டை,கீழஈரால்,

அருணாசலபுரம் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது. நடைபெற்ற ஜமாபந்தியில் மொத்தம் 175 மனுக்கள் பெறப்பட்டன, இலவச வீட்டு மனை பட்டா. பட்டா மாறுதல் மொத்தம் 50 நபர்களுக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் உதவித் தொகை, திருமண உதவித் தொகை, தற்காலிக இயலாமை உதவித்தொகை மொத்தம் 10  நபர்களுக்கும் அதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு  எட்டயபுரம் வருவாய் தீர்வாய அலுவலர் ரவிச்சந்திரன் வழங்கினார்.  இதில் எட்டயபுரம் தாசில்தார் சுபா மற்றும் கோவில்பட்டி தனி வட்டாட்சியர் ஆதி திராவிட நலம் ராஜ்குமார்,சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மல்லிகா, மண்டலத் துணை வட்டாட்சியர் மாரிமுத்து தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் சக்தி .அசோக். முகேஷ். மகேஷ். மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர் இதேபோல் விளாத்திகுளம் விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்றது.