விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ரீல்ஸ் வீடியோ போட்ட மேலும் ஒரு தவெக பெண் நிர்வாகி மீது காவல் நிலையத்தில் புகார் மனு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தமிழக வெற்றிகழக பெண் நிர்வாகி தேவி என்பவர், தனது பிறந்த நாளன்று கோவில் வளாகத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.


அதேபோல் தமிழக வெற்றிக்கழகத்தின் மற்றொரு பெண் நிர்வாகி முத்து என்பவர் தனது கணவருடன் சேர்ந்து கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது குறித்தும், விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் செயல் அலுவலர் உமா மகேஸ்வரி  விளாத்திகுளம் காவல் நிலையத்தில், போட்டோ வீடியோ எடுக்க கூடாது என்று விளம்பரப்பலகை வைக்கப்பட்டதையும் மீறி கோவிலுக்குள் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தார்.



கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனு மீது CSR NO :0569/2026 -ல் விளாத்திகுளம் காவல்துறையினர் சார்பில் புகார் மனு ரசீது வழங்கப்பட்டுள்ளது.