விளாத்திகுளம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா : சீர்வரிசை பொருட்களை வழங்கி எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மகிழ்ச்சி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 200 கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்ட சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் விழாவில் கலந்து கொண்ட விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கர்ப்பிணி பெண்களையே குத்துவிளக்கு ஏற்ற வைத்த நிகழ்வு அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், இன்று விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கலந்து கொண்டு வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட விளாத்திகுளம் மற்றும் புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 200 கர்ப்பிணி பெண்களுக்கு சேலை, தேங்காய், மஞ்சள் கயிறு, பூ, வளையல், குங்குமம் அடங்கிய வளைகாப்பு சீர் தொகுப்பினை வழங்கினார். இதனைத்தொடர்ந்து கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் பூட்டி வளைகாப்பு விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு வகைவகையான சாதங்கள் கொண்டு அறுசுவை விருந்து மதிய உணவாக வழங்கப்பட்டது.