விளாத்திகுளம் அருகே ரூ,89-லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 89-லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார். நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.