விளாத்திகுளம் அருகே உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆட்சியர் 2வது நாளாக ஆய்வு!
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் ஊராட்சி பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடியில் வாரியம் மூலம் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கக்கூடிய நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் தண்ணீரில் குளோரின் அளவு குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து குளத்தூர் ஊராட்சி அரசு கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். குளத்தூர் ஊராட்சி, இந்து நாடார் நடுநிலைப் பள்ளியை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.