மாசார்பட்டி கிராமத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்: வீடு கட்டும் பயனாளிகளுக்கு வேலை உத்தரவு வழங்கிய ஊராட்சி மன்ற தலைவி கவிதா அய்யாதுரை!
தமிழக முழுவதும் கிராமப் பகுதி மக்களுக்காக நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்டம் முகாமின், ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மாசார்பட்டி கிராமத்தில், மாசார்பட்டி, இனம் அருணாசலாபுரம், முத்துலாபுரம், கருப்பூர்,வேடபட்டி, அயன்ராசாப்பட்டி, கீழ் நாட்டுக்குறிச்சி, மேல நம்பிபுரம், வீரப்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் தங்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேனிடம் வழங்கினார். அதேபோல் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகளுக்கு வேலை உத்தரவு மற்றும் மக்களைத் தேடி மருந்து பெட்டகத்தை மாசார்பட்டி கிராம பயனாளிகளுக்கு மாசார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அய்யாதுரை வழங்கினார், இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.