விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்கண்டயேனை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்!



தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக நடைபெற்ற  " ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் "  பொதுக்கூட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் விளாத்திகுளம் திமுக வேட்பாளரும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன், தூத்துக்குடி வேட்பாளரும் அமைச்சருமான கீதாஜீவன்,  திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் கருணாநிதி உள்ளிட்டோரை ஆதரித்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருக்கு வாக்களிக்குமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.


இந்நிகழ்வில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக மாநில மகளிர் அணி தலைவியுமான கனிமொழி உள்ளிட்ட திமுக தோழமைக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.