விளாத்திகுளம் அருகே "தேவர் ஜெயந்தியை" முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் :2 1/2 பவுன் தங்கச்செயின், வெள்ளி தார்கம்பு, ஆட்டுக்கிடாய், ரொக்கப் பரிசு என பரிசு மழையில் திகைக்க வைத்த கமிட்டியாளர்கள் : ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பு! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இப்பந்தயத்தில் தூத்துக்குடி,திருநெல்வேலி,மதுரை, தேனி, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாடு, சிறிய மாடு மற்றும் பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை சாலையின் இருபுறமும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பந்தய ரசிகர்கள் ஆர்வத்துடன் போட்டியை கண்டு களித்தனர்.
எட்டயபுரத்தில் இருந்து விளாத்திகுளம் செல்லும் சாலையில் நடைபெற்ற போட்டியில், வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கும் 2 1/2 பவுன் தங்கச் செயின், 50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி தார்கம்பு, ஆட்டுக்கடாய் மற்றும் ரொக்கத் தொகை வழங்கி வெற்றியாளர்களை பரிசுகளால் கமிட்டியாளர்கள் திகைக்க வைத்தனர்...அதுமட்டுமன்றி, இன்று நடைபெற்ற இந்த எட்டயபுரம் மாட்டு வண்டி பந்தயமானது மாட்டுவண்டி பந்தய ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இரண்டாவது போட்டியில் வெற்றி வெற்றி வீரர்களுக்கும் ஒரு பவுன் தங்க செயின் மற்றும் ஆட்டுக்கிடாய் வெள்ளித்தார் கம்பு, ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Vilathikulam
2 1/2 பவுன் தங்கச்செயின், வெள்ளி தார்கம்பு, ஆட்டுக்கிடாய், ரொக்கப் பரிசு என பரிசு மழையில் திகைக்க வைத்த கமிட்டியாளர்கள்
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாட்டு வண்டி போட்டியில் விபத்து : ஒன்றோடு ஒன்று மோதியதில் மாடுகள் உட்பட ஏராளமானோர் படுகாயம்.
அடுத்த
பாஜக நிர்வாகிகள் 19 பேர் கைது - கொடிக்கம்பம் பறிமுதல் !
இதையும் படிக்கலாம்
நல்லப்ப சுவாமிகள் 61வது நினைவு குருபூஜை இசை விழா!
25 Apr 2025
இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் உறுப்பினர் பதிவு விண்ணப்ப படிவங்களை வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
21 Feb 2025
புதிய பயணியர் நிழற்குடை கட்டும் பணியை MLA மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.
06 Nov 2024
படர்ந்தபுளியில் மாபெரும் மாநில அளவிலான வாலிபால் போட்டி!
06 May 2024