விளாத்திகுளத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர் செல்வம் தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விளாத்திகுளம் ஒன்றிய, நகர கழகச் செயலாளர்கள், மகளிரணியினர் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது குறித்து கட்சியினருக்கு ஆலோசனை கூறினார். கட்சியினர் அனைவரும் 2026-ல் அதிமுக ஆட்சியமைக்க கடுமையாக கட்சி பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைத்தொடர்ந்து பூத் கமிட்டி உறுப்பினர்கள் படிவங்களை கட்சியினரிடமிருந்து பெற்றுக்கொண்டார். 




இந்நிகழ்வில் நகர செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர் பால்ராஜ்,முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன்,கோவில்பட்டி மகளிர் இளம்பெண் பாசறை எம்.ஆர்.கே கவியரசன், நிர்வாகிகள் வரதராஜ பெருமாள், வேல்முருகன், மகளிர் அணி சாந்தி, பிரியா தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்த் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.