விளாத்திகுளத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் !


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு பாஜகவினர்,தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்ததை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.


இந்நிகழ்வில் ஒன்றிய தலைவர் காட்டுராஜா, ஒன்றிய பிரதிநிதி கனகவேல்ராஜ், மாவட்டத் துணைத் தலைவர் சேதுராஜ், மாவட்டச்செயலாளர் சக்திகுமார்,மாவட்ட பொறுப்பாளர்கள் கந்தசாமி, அருணாச்சலம், மூர்த்தி, ஒன்றிய பொது செயலாளர் சுப்புராஜ், ஒன்றிய பொறுப்பாளர்கள் முனியசாமி, பெருமாள், VHP கோட்ட பொறுப்பாளர் ராமகாளியப்பன், கிளைத் தலைவர் சிங்கராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.