விளாத்திகுளத்தில் பாஜக சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்!
தமிழகத்தின் பல பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பட்ஜெட் விளக்க பிரச்சார கூட்டம் நடைபெற்று வருகிறது. இதே போன்று இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக சார்பில், 2025-2026 பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. விளாத்திகுளம் ஒன்றியத் தலைவர் காட்டு ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சரவண கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் போத்தீஸ் ராமமூர்த்தி, முன்னாள் ஒன்றிய தலைவர் கனகவேல்ராஜ், மாவட்ட துணைத் தலைவர் சேது ராஜ், மாவட்ட செயலாளர் சக்திகுமார், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் கந்தசாமி, பிற மொழி பிரிவு மாவட்ட தலைவர் முருகன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமணக்குமார் உட்பட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த 2025-2026 பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சார கூட்டத்தில், தற்போது நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்படவுள்ள பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் பற்றி கட்சி நிர்வாகிகள் விளக்கிக் கூறினர். அதுமட்டுமின்றி, திராவிட முன்னேற்றக் கழகத்தையும், திமுக அமைச்சர்களையும் பாஜகவினர் கடும் விமர்சனம் செய்து பேசினர்...