திருச்செந்தூர் அருகே 1 கோடி ரூபாய் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்!
திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை கடற்கரை பகுதியில் Q பிரிவு ஆய்வாளர் விஜயா அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ்,சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் தலைமையிலான காவலர்கள் இருதயராஜ்குமார், இசக்கிமுத்து முதல் நிலைக்காவலர் பழனி பால்முருகன் ஆகியோர் கடற்கரைப் பகுதியில் தீவிர ரவுண்டு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்தலாரியை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது லாரியில் இருந்தவர்கள் தப்பி ஓடிள்ளனர்,இதனை அடுத்து லாரி முழுவதும் சோதனை செய்தபோது லாரியில் 30 கிலோ எடை கொண்ட 82 மூட்டைகளில் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது, இதனை அடுத்து பீடியலைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் இருசக்கர வாகனத்தை Q போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.