விளாத்திகுளம் அருகே ஆட்டோ மீது டிப்பர் மோதியதில் உடல் நசுங்கி ஒருவர் பலி!
தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விளாத்திகுளம் அருகே உள்ள சிந்தலக்கரை பகுதியைச் சேர்ந்த முத்தையா மகன் ஆனந்தன்(37) தேசிய நெடுஞ்சாலையில் தனது ஆட்டோவில் பயணியை ஏற்றிக்கொண்டு சென்றபோது சிந்தலக்கரை விலக்கு அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத டிப்பர் லாரி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஆட்டோவில் வந்து கொண்டிருந்த திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரது மகன் ரவி (55) கட்டிட மேஸ்திரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் விபத்தில் உயிரிழந்த ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.