எட்டையாபுரத்தில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய தவெகவினர்!
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்பினரால் கொண்டாடப்பட்டு வருகிறது, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சியினர் காந்தியடிகளுக்கு புகழ் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
அதேபோல் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் 52-வது நினைவு தினம் தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சியினரால் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது, இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேருந்து நிலையம் முன்பு, எட்டையாபுரம் பகுதி தமிழக வெற்றி கழக கட்சியினர் சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் திருவுருவப்படம் மற்றும் கர்மவீரர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வீரவணக்கம் செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து எட்டையாபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள இருந்த பொது மக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழக வெற்றி கழக வடகிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் செந்தில்குமார், தலைமையில், எட்டயபுரம் நகர இளைஞரணி நிர்வாகிகள் முன்னிலையில் முன்னாள் பாரதிமில் சேர்மன் ஆழ்வார் உதயகுமார் அன்னதானம் வழங்கினார்.
இந்தநிகழ்வில் மாவட்டத்துணைச்செயலாளர் முருகேஸ்வரி பாரதி, இளைஞர் அணி நிர்வாகிகள் செந்தில்குமார், மணிகண்டன், பாலு, கார்த்திக் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.