தேர்தலுக்கு முன்பு அள்ளி வீசிய வாக்குறுதிகளை த.வெ.க.அரசு கண்டு கொள்வதாக இல்லை…
கைது செய்யப்பட்ட செவிலியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் - ஆனால் அவர்கள் கோரிக்கைகள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை…
ஜி. எஸ். டி. வருவாய் குறைவுக்கும், த.வெ.கவிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை - எட்டயபுரம் அருகே கீழ ஈராலில் கனிமொழி எம். பி. பேட்டி!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழஈராலில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று ஆய்வு செய்தார். அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உடன் இருந்தார்.
இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் பேசுகையில்…
மக்களின் கோரிக்கையை ஏற்று, ஒன்றிய அரசு மூலமாக கீழ ஈரால் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த பணிகள் நிறைவேறும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர். மக்கள் மேம்பாலத்தினை கடக்கும் வகையில் மூன்று இடங்களில் வழிகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். தூத்துக்குடியில் 6 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது விரைவில் முடிக்கப்படும் என்றார்.
த. வெ. க ஆட்சியில் ஜிஎஸ்டி வருவாய் குறைந்து கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது, செப்டம்பர் மாதம் மட்டும் 5 % ஜி எஸ் டி வருவாய் குறைந்துள்ளது குறித்து கேட்டதற்கு...
ஜி. எஸ். டிக்கும், த.வெ.க. விற்கும் என்ன சம்பந்தம்.. சத்தியமாக புரியவில்லை..
திமுக மாநிலத்தில் ஆட்சி செய்த அரசு, ஜி. எஸ். டி. என்பது நாடு தழுவிய அளவில் ஒன்றிய அரசு எடுக்கக்கூடிய முடிவு
அதனால அதுக்கும் (ஜி.எஸ்.டி வருவாய் குறைவு) த. வெ. கவிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு என்று தெரியவில்லை என்றார்..
த. வெ. க. அரசு வந்த பிறகு ஜிஎஸ்டி வருவாய் வீழ்ச்சி அடைந்துள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியிருந்த நிலையில் அதற்கு மாறான ஒரு கருத்தினை கனிமொழி எம். பி. கூறியுள்ளார்..
தொடர்ந்து கனிமொழி எம்.பி.செய்தியாளர்களிடம் பேசுகையில் தேர்தலுக்கு முன்பு த.வெ.க. எல்லோருக்கும் வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசினார்கள். தேர்தலுக்குப் பின்பு யாருக்கெல்லாம் வாக்குறுதிகள் கொடுத்தார்களோ விவசாயிகள், உழைக்கக் கூடிய மக்கள், செவிலியர்கள் என இவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இந்த அரசு கண்டு கொள்வதாக இல்லை என்ற நிலை தெளிவாகத் தெரிகிறது.
நியாயத்துக்காக போராடக்கூடிய செவிலியர்களை கைது செய்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து திமுக கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜையும் கைது செய்து இந்த அரசு அடைத்து வைத்திருந்தது. அதற்குப் பிறகு இரவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் செவிலியர்களின் கோரிக்கைகள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
எல்லா பகுதிகளிலும் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில் த.வெ.க நிர்வாகிகள் உடந்தையாக இருந்திருக்கின்றனர். இல்லையென்றால் இல்லையென்றால் அதற்கு காரணமானவர்களாக இருந்திருக்கின்றார்கள்.
ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பிறகு என்ன வேணாலும் பண்ணலாம் எங்களை கேள்வி கேட்பதற்கு யாரும் இல்லை என்ற மமதையில் இப்படி நடந்து கொள்கிறார்களா? என்று தெரியவில்லை
ஒவ்வொரு நாளும் குற்றச்சம்பவங்கள், கொலை சம்பவங்கள், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கும் எடுத்து சரி செய்வதாக இல்லை என்றார்.
நடைபெற்ற இந்த ஆய்வின் போது தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி,கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன்,விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.