விளாத்திகுளம் அருகே சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த காரின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து - மென் பொறியாளர் உட்பட 3 பேர் சம்பவ இடத்தில் பலி*


*மாலை அணிந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற போது பரிதாபம் - 2 பேர் படுகாயம்*



திருப்பூர் மாவட்டம் அலங்கியம் பகுதியை சேர்ந்த மென் பொறியாளர் விக்னேஷ்.  இவர் தனது நண்பர்கள்  செல்வராஜ், விஜயகுமார், மகேஷ் குமார், ராஜ்குமார் ‌ஆகியோருடன் மாலை அணிந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். காரை செல்வராஜ் ஓட்டி வந்துள்ளார். 



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேலக்கரந்தை பகுதியில் தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக காரை நிறுத்தி விட்டு தண்ணீர் குடித்து உள்ளனர். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கார் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு சென்றுவிட்டது. 



இதில் சம்பவ இடத்திலேயே செல்வராஜ், விஜயகுமார், விக்னேஷ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 



மகேஷ் குமார் மற்றும் ராஜ்குமார் இருவரும் காயம் அடைந்தனர். 


இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாசார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். உயிர் இழந்தவர்கள் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சம்பவ இடத்தினை விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து மாசார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மாலை அணிந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றவர்கள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.