விளாத்திகுளம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ரூ.2-லட்சம் மதிப்பீட்டில் நந்தவனம்! 


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மேற்ப்புறம் ரூ.2-லட்சம் மதிப்பீட்டில் நந்தவனம் அமைப்பதற்கான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.

உடன் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரி, திருக்கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.