விளாத்திகுளம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமத்தை சேர்ந்த முனியசாமி என்பவரின் மனைவி வெள்ளையம்மாள் (82), இவர் வீட்டு அருகே உள்ள வேப்பமர நிழலில் மதியம் தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் இன்று வீட்டு அருகே உள்ள வேப்பமர நிழலில் தூங்கிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வேப்ப மரத்தின் அருகே இருந்த வீட்டின் சுவர் வெள்ளையம்மாள் மீது விழுந்ததில் வெள்ளையம்மாள் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார், இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் வெள்ளையம்மாளின் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.